Dailyhunt
"ஆஸ்திரேலியாவை ஆக்கிரமிக்கும் இந்தியர்கள். இங்கிலாந்தையே பின்னுக்குத் தள்ளி முதலிடம். சிக்கலில் புலம்பெயர்ந்தோர்".!!!

"ஆஸ்திரேலியாவை ஆக்கிரமிக்கும் இந்தியர்கள். இங்கிலாந்தையே பின்னுக்குத் தள்ளி முதலிடம். சிக்கலில் புலம்பெயர்ந்தோர்".!!!

Tamizhan media 2 weeks ago

ஸ்திரேலியாவில் நீண்டகாலமாக முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து வம்சாவளி குடியேறிகளைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியர்கள் தற்போது மக்கள் தொகையில் முன்னிலை பெற்றுள்ளனர்.

2013-ல் 10 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த இங்கிலாந்து நாட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், இந்தியர்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக சீனா மற்றும் நியூசிலாந்து நாட்டவர்கள் முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களில் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் இந்த மக்கள் தொகை மாற்றம் வெறும் எண்ணிக்கை சார்ந்தது மட்டுமல்லாமல், அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் இந்தியர்களின் உழைப்பு முக்கியப் பங்காற்றி வருவதை இது உணர்த்துகிறது.

ஆஸ்திரேலியாவின் பொருளாதார நிலையைப் பொறுத்தவரை, 1990-களின் தொடக்கத்திலிருந்து பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்படாமல் இருப்பதற்கு வெளிநாட்டுக் குடியேற்றங்களே முதுகெலும்பாக இருந்துள்ளன. கொரோனா காலத் தடையால் தற்காலிகமாகச் சரிந்த குடியேறிகளின் பங்கு, 2025-ல் 32 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு என்பது அந்நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் இந்தியர்கள் அதிக அளவில் பங்களிப்பதையே காட்டுகிறது. இருப்பினும், இந்த அதீத குடியேற்றம் அந்நாட்டில் தற்போது நிலவி வரும் மிக மோசமான வீட்டு வசதி தட்டுப்பாட்டிற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

மறுபுறம், இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஆஸ்திரேலிய அரசியலில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. ‘ஒன் நேஷன்’ போன்ற பழமைவாதக் கட்சிகள் குடியேற்றத்திற்கு எதிராகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. இக்கட்சிகளுக்கு உள்ளூர் மக்களிடையே பெருகி வரும் ஆதரவு, அங்கு வாழும் இந்தியர்களின் எதிர்கால நிலையைச் சற்றுச் சிக்கலானதாக மாற்றியுள்ளது. உழைப்பால் ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தை உயர்த்தும் இந்தியர்களுக்கு, அங்கு நிலவும் இடப்பற்றாக்குறை மற்றும் அரசியல் எதிர்ப்பு ஆகியவை வரும் காலங்களில் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media