Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அச்சோ. காவலரா?. தந்தையா?. ஏழை மணப்பெண்ணுக்குத் தாயாய் நின்று. சீர்செய்த காவல் அதிகாரி. பாராட்டும் நெட்டிசென்கள்.!

அச்சோ. காவலரா?. தந்தையா?. ஏழை மணப்பெண்ணுக்குத் தாயாய் நின்று. சீர்செய்த காவல் அதிகாரி. பாராட்டும் நெட்டிசென்கள்.!

Tamizhan media 1 week ago

தேவ்ரியா மாவட்டத்தைச் சேர்ந்த பரியார்பூர் காவல் நிலையத்தின் SHO அசுதோஷ் அவர்கள், ஒலிபெருக்கி குறித்த ஆய்வுப் பணிக்காக லஹில்பார் கிராமத்தில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுள்ளார்.

அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த திருமணத்தைக் கண்டு, மணமக்கள் குறித்து விசாரணை நடத்தினார். அதில், மணப்பெண்ணின் பெற்றோர்கள் சிறுவயதிலேயே இறந்துவிட்டதாகவும், வறுமையில் வாடும் தாய்மாமன் தான் அவளை வளர்த்து இந்தத் திருமணத்தை நடத்தி வைப்பதாகவும் அறிந்து கொண்டார்.

இதனைக் கேட்டதும் நெகிழ்ந்த SHO அசுதோஷ் அவர்கள், உடனடியாக சந்தையிலிருந்து குளிர்சாதனப் பெட்டி, மின்விசிறி, மிக்ஸி போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் தன் சொந்தச் செலவில் வரவழைத்து, புதுமணத் தம்பதியினருக்குப் பரிசளித்து வாழ்த்தினார். மேலும், அந்த ஏழைக் குடும்பத்திற்குச் சுமையைக் குறைக்க, கோயிலில் ஆகும் பொதுவான செலவுக் கட்டணங்களை விலக்களிக்குமாறு அர்ச்சகரிடம் வேண்டுகோள் விடுத்தார். அர்ச்சகரும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

காவல் துறை என்றாலே கடுமையான அணுகுமுறை என்ற எண்ணத்தைப் போக்கி, மனிதநேயத்துடன் செயல்பட்ட அதிகாரி அசுதோஷ் அவர்களின் இந்தச் செயல் அனைவரின் மனதையும் நெகிழ வைத்துள்ளது. ஏழைக் குடும்பத்தின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, ஒரு தந்தையின் இடத்தில் நின்று உதவிய அந்த நல்மனம் படைத்த காவல் அதிகாரியை நாம் அனைவரும் கைகூப்பி மனதாரப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media