இந்தியக் கடற்படையின் கப்பல் பழுதுபார்க்கும் தளம் மற்றும் விமானத் தளங்களில் காலியாக உள்ள 240 'அப்ரெண்டிஸ்' இடங்களை நிரப்பப் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிட்டர், எலக்ட்ரீஷியன், வெல்டர் மற்றும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் வரும் ஜூன் 1, 2026 அன்று 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து கொச்சியில் உள்ள கடற்படை முகவரிக்குத் தபால் மூலம் அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் போய்ச் சேர வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 17, 2026 ஆகும். கூடுதல் விவரங்களை rdsdekerala.dgt.gov.in என்ற இணையதள முகவரியில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசு வேலையில் சேர விரும்பும் இளைஞர்களுக்குக் கடற்படையில் கிடைக்கும் இந்த வாய்ப்பு ஒரு பொற்காலமாகும்.

