வடக்கு சைப்ரஸில் உள்ள கிரீனியா துறைமுகத்திற்கு அருகில் சுமார் 270 பயணிகளுடன் சென்ற பயணிகள் படகு ஒன்று திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து அங்கு அவசரகால பெரிய அளவிலான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விபத்துக்குள்ளான அந்தப் படகில் மொத்தம் 259 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்ததாக துருக்கிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் பலியானோர் போக, மீட்கப்பட்டவர்களில் பெரும்பானோர் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கிரீனியா துறைமுகத்திலிருந்து சில கடல் மைல்கள் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது, படகில் தண்ணீர் புகுந்ததால் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதற்கிடையே, நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு துரித நடவடிக்கையாக மீட்புக் குழுவினர் பலரை மீட்டுள்ளனர் என்றும், எஞ்சியவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் உள்ளூர் மேயர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

