மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் மும்பை பிரிவினர், சர்வதேச அளவில் விமான நிலையம் வழியாக நடைபெற்ற பெரிய தங்கக் கடத்தல் வலையமைப்பை முறியடித்துள்ளனர்.
இந்த அதிரடி நடவடிக்கையில் ரூ. 10.75 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, விமான நிலைய ஊழியர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துபாய், பாங்காக் மற்றும் மாலே போன்ற வெளிநாடுகளில் இருந்து மும்பை வழியாகப் பயணிகளைப் பயன்படுத்தி இந்தத் தங்கக் கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. விமான நிலையத்திற்குள் இருக்கும் ஊழியர்களின் உதவியோடு சுங்க வரியை ஏமாற்றி தங்கம் வெளியே கடத்தப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் விமான நிலைய ஒப்பந்தப் பணியாளர் ஆவார். இந்தத் கடத்தல் வலையியலில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டறியும் தீவிர விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

