Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஐயோ கொடுமையே. சாக்லெட் கொடுத்து  மயக்கி. 6 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று. கழுத்து நெரித்துக் கொன்ற கொடூரன். நெஞ்சை நடுங்கவைக்கும் CCTV காட்சி.!

ஐயோ கொடுமையே. சாக்லெட் கொடுத்து மயக்கி. 6 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று. கழுத்து நெரித்துக் கொன்ற கொடூரன். நெஞ்சை நடுங்கவைக்கும் CCTV காட்சி.!

Tamizhan media 2 weeks ago

கிரேட்டர் நொய்டாவின் எகோடெக்-3 காவல் நிலையத்திற்குட்பட்ட ஹால்டோனி பகுதியில் ஆறு வயது சிறுமி ஒருவரைக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு நபர் சிறுமியின் உடலை சாக்குமூட்டையில் சுமந்து செல்லும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

மற்றொரு சிசிடிவி காட்சியில், ஒரு இளைஞன் அந்தச் சிறுமியை நைச்சியமாக பேசி ஒரு வீட்டிற்குள் அழைத்துச் செல்வது பதிவாகியுள்ளது. இந்தத் கொடூரக் குற்றத்தில் அருகில் வசிக்கும் ஒரு அயலவர் மீது தீவிர சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொலைக்கான உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சோகமான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற சூழலையும் மிகுந்த அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். குற்றவாளியைப் பிடிக்க பல்வேறு தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். பின்னர் சிசிடிவி பதிவுகள் மற்றும் இதர துப்புச் துலக்குதல் மூலம் சந்தேகத்திற்குரிய நபரை அடையாளம் கண்ட காவல்துறையினர், அவரை வெற்றிகரமாகக் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media