Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஐயோ. உள்ளே குட்டி மாட்டிக்கிச்சு. 3 வயது சிறுமியை ஆழமான. இடுடுக்கில் இறக்கி நாய்க்குட்டியைக் காப்பாற்றிய. திக் திக் நிமிடங்கள்.!!

ஐயோ. உள்ளே குட்டி மாட்டிக்கிச்சு. 3 வயது சிறுமியை ஆழமான. இடுடுக்கில் இறக்கி நாய்க்குட்டியைக் காப்பாற்றிய. திக் திக் நிமிடங்கள்.!!

Tamizhan media 1 week ago

சீனாவின் காசு மாநிலம் லின்சியா நகரில் கட்டிடங்களுக்கு இடையே உள்ள குறுகிய மற்றும் ஆழமான இடைவெளியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டியை மீட்க, 3 வயது சிறுமி ஒருவர் கயிறு மூலம் கீழே இறக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

நன்னன் என்ற அந்த சிறுமிக்கு பெரியவர்கள் ஒரு தற்காலிக சேணம் அணிவித்து, பாதுகாப்புடன் அந்த குறுகிய பகுதிக்கு கீழே கவனமாக இறக்கிவிட்டுள்ளனர்.

கீழே இறங்கிய சிறுமி, பயந்து போய் நடுங்கிய அந்த நாய்க்குட்டியை பத்திரமாக கையில் எடுத்துக்கொண்டாள். இதைப் பார்த்த பெரியவர்கள் சிறுமியையும், நாய்க்குட்டியையும் பாதுகாப்பாக மேலே மீட்டனர்; இந்த ஆபத்தான மீட்புப் பணி குறித்த வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நாய்க்குட்டியை மீட்ட பிறகு, அந்த சிறுமியின் குடும்பத்தாரே அதனைத் தத்து எடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளனர். சிறுமியின் துணிச்சலான இந்தச் செயலையும், விலங்குகள் மீதான அவர்களின் அன்பையும் பலரும் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media