Dailyhunt
அண்ணாமலைக்கு காத்திருக்கும் பவர்ஃபுல் போஸ்ட்டிங்.. மோடி கொடுக்கும் சர்ப்ரைஸ்... தமிழக அரசியலை தலைகீழாக மாற்றப்போகும் அறிவிப்பு.!

அண்ணாமலைக்கு காத்திருக்கும் பவர்ஃபுல் போஸ்ட்டிங்.. மோடி கொடுக்கும் சர்ப்ரைஸ்... தமிழக அரசியலை தலைகீழாக மாற்றப்போகும் அறிவிப்பு.!

Tamizhan media 2 weeks ago

மிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, அண்ணாமலை பிடிவாதமாகத் தமக்கு வேண்டும் என்று கேட்ட கோவை வடக்கு தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ வானதி சீனிவாசனே மீண்டும் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கும் வானதிக்கும் இடையே நிலவி வந்த கடும் போட்டியால் வேட்பாளர் தேர்வில் திணறிய டெல்லி தலைமை, இறுதியாக வெளியிட்ட முதற்கட்டப் பட்டியலில் அண்ணாமலையின் பெயரை அதிரடியாக நீக்கிவிட்டு, வானதிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. தான் கேட்ட தொகுதி கிடைக்காவிட்டால் போட்டியிடப் போவதில்லை என அண்ணாமலை ஏற்கனவே கூறியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

அண்ணாமலையின் பெயர் விடுபட்டதற்குப் பின்னால் பல்வேறு அரசியல் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் கோவையில் போட்டியிட்டபோது, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைந்து தன்னைத் தோற்கடித்ததாக அண்ணாமலை கருதுகிறார். தற்போது மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினால், அது தனது அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும் என அவர் அஞ்சுவதாகவும், அதனால் தான் போட்டியிடத் தயங்குவதாகவும் ஒரு தகவல் நிலவுகிறது. திராவிடக் கட்சிகளின் வியூகங்களுக்கு அஞ்சி அவர் பின்வாங்குகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தாலும், சொந்தக் கட்சியிலேயே அவருக்கு சீட் கிடைக்காதது அவரது தீவிர ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் குழப்பமான சூழலில்தான் பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்துள்ளார். தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தயாரித்த உத்தேச பட்டியலின் அடிப்படையில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பிரதமர் தலைமையில் நடைபெறும் பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கேரள தேர்தல் பிரச்சாரத்திலிருந்து அவசரமாக சென்னை திரும்பிய அண்ணாமலை, பிரதமரைத் தனியாகச் சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது வேட்பாளர் பட்டியல் விவகாரம் மற்றும் அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எட்டப்பட வாய்ப்புள்ளது.

அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாத பட்சத்தில், அவருக்குத் தேசிய அளவில் கட்சியின் முக்கியப் பொறுப்போ அல்லது மத்திய அமைச்சரவையில் இடமோ வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. தேர்தலில் நின்று தோல்வி பயத்தை எதிர்கொள்வதை விட, அதிகாரமிக்க தேசியப் பதவியில் அமர்வது அவரது அரசியல் வாழ்க்கைக்குப் பாதுகாப்பானது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், “அதிரடி அரசியல்” பேசி வந்த அண்ணாமலை தேர்தல் களத்திலிருந்து ஒதுங்குவது தொண்டர்களிடையே தொய்வை ஏற்படுத்தலாம். அண்ணாமலையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை அறிய ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media