Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அப்படியே கெட்டியா பிடிச்சுக்கோங்க. கையை விட்றாதீங்க. சீறும் வெள்ளத்தில் தவித்த இளைஞர். துப்பட்டாவை வீசி உயிரை மீட்ட புதுமணப் பெண். திகில் வைரல் வீடியோ.!

அப்படியே கெட்டியா பிடிச்சுக்கோங்க. கையை விட்றாதீங்க. சீறும் வெள்ளத்தில் தவித்த இளைஞர். துப்பட்டாவை வீசி உயிரை மீட்ட புதுமணப் பெண். திகில் வைரல் வீடியோ.!

Tamizhan media 3 days ago

மாச்சலப் பிரதேசத்தின் சம்பா பகுதியில் பெய்த கனமழையால் சாலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவர், சீறிப்பாய்ந்த நீரின் பலமான நீரோட்டத்தில் சிக்கி நகர முடியாமல் தவித்தார்.

அந்த வழியாக காரில் வந்த ஒரு குடும்பத்தினர் இதைக் கண்டு உடனடியாக வாகனத்தை நிறுத்தி அவரை மீட்க முயன்றனர்.

காரில் இருந்து இறங்கிய நபர் ஒருவர் அவரை நெருங்க முயன்றார், ஆனால் வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் அது கடினமாக இருந்தது. அப்போது, காரில் இருந்த புதுமணப்பெண் ஒருவர் சட்டென்று வெளியே வந்து, தனது துப்பட்டாவை அந்த பைக் ஓட்டுநரை நோக்கி நீட்டினார். அந்தத் துணியைப் பிடித்துக்கொண்டு பைக் ஓட்டுநர் தன்னைச் சமாளித்து மெதுவாக காரை நோக்கி நகர்ந்தார். பின்னர், அங்கு நின்ற நபரும் கைகொடுக்க, இருவரும் சேர்ந்து அவரைப் பாதுகாப்பாக மீட்டனர். இந்த விநாடிகள் அனைத்தும் காணொளியாக வெளியாகி இணையத்தில் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

இதனிடையே, சம்பாவில் உள்ள கோட்லா-உரை சாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலச்சரிவு காரணமாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மலையின் ஒரு பகுதி சரிந்து பாறைகளும் இடிபாடுகளும் சாலையில் விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இதில் எந்த வாகனங்களோ அல்லது மனிதர்களோ சிக்கவில்லை என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், தொடர் மழை காரணமாக அப்பகுதியில் நிலச்சரிவு அபாயம் இன்னும் நீடிக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media