Dailyhunt
அரசு ஊழியர்களின் சாய்ஸ் 'தவெக'..? ஒரத்தநாட்டில் முன்னிலையில் அரவிந்த் - ஆச்சரியத்தில் அரசியல் கட்சிகள்..!!

அரசு ஊழியர்களின் சாய்ஸ் 'தவெக'..? ஒரத்தநாட்டில் முன்னிலையில் அரவிந்த் - ஆச்சரியத்தில் அரசியல் கட்சிகள்..!!

Tamizhan media 1 week ago

ரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் அரவிந்த் தொடக்கத்திலிருந்தே முன்னிலை பெற்று வருகிறார்.

தற்போதைய நிலவரப்படி, தவெக வேட்பாளர் அரவிந்த் 3,703 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான திமுக வேட்பாளரை விட 467 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த இந்தத் தொகுதியில் ஒரு புதிய கட்சியின் வேட்பாளர் தபால் வாக்குகளில் முன்னிலை பெறுவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் 3,236 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் 1,118 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளனர். தபால் வாக்குகள் என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாகக் கருதப்படுவதால், இந்தத் தொடக்கக் கால முன்னிலை தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்ற முக்கிய கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி தவெக வேட்பாளர் முன்னிலை வகிப்பது அரசியல் வட்டாரத்தில் ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media