Dailyhunt
அரசு வேலை தேடுபவரா நீங்கள்?. இதோ ₹1,00,000-க்கு மேல் சம்பளம் தரும் IRFC அறிவிப்பு. எக்ஸாம் எழுதி இந்த வேலையை வாங்குனா லைஃப் செட்டில்ட்.. இந்திய ரயில்வேயின் மாஸ் அப்டேட்.!!!

அரசு வேலை தேடுபவரா நீங்கள்?. இதோ ₹1,00,000-க்கு மேல் சம்பளம் தரும் IRFC அறிவிப்பு. எக்ஸாம் எழுதி இந்த வேலையை வாங்குனா லைஃப் செட்டில்ட்.. இந்திய ரயில்வேயின் மாஸ் அப்டேட்.!!!

Tamizhan media 1 week ago

த்திய அரசுத் துறையில் நிரந்தரப் பணியைத் தேடும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக, இந்திய ரயில்வே நிதி கழகம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அசிஸ்டண்ட் மற்றும் அசிஸ்டண்ட் மேனேஜர் ஆகிய பதவிகளுக்காக மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வணிகம் அல்லது நிதித் துறையில் தகுதியான கல்விப் பின்னணி கொண்ட 18 முதல் 30 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் தேர்வு செய்யப்படுபவர்களுக்குப் பணியின் தன்மையைப் பொறுத்து மாதம் ரூ.21,000 முதல் அதிகபட்சமாக ரூ.1,40,000 வரை மிகச் சிறந்த ஊதியம் வழங்கப்பட உள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்குத் தகுதியுள்ளவர்கள்-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க 2026, மே 1-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் கணினி வழித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை என்பதால், மத்திய அரசில் கைநிறைய சம்பளத்தில் பணிபுரிய விரும்பும் தகுதியுள்ள இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media