Dailyhunt
அதிமுகவில் அடுத்த விக்கெட் அவுட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் . இரவோடு இரவாக நடந்த மிகப்பெரிய அரசியல் ட்விஸ்ட்..!

அதிமுகவில் அடுத்த விக்கெட் அவுட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் . இரவோடு இரவாக நடந்த மிகப்பெரிய அரசியல் ட்விஸ்ட்..!

Tamizhan media 1 week ago

திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான செஞ்சி ராமச்சந்திரன், தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய தாய் கழகமான திமுகவில் மீண்டும் இணைந்துள்ளார்.

1994-ல் வைகோ மதிமுகவைத் தொடங்கியபோது அவருடன் சென்ற செஞ்சி ராமச்சந்திரன், 2014-ல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அழைப்பை ஏற்று அதிமுகவில் ஐக்கியமானார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தற்போது விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அவர் மீண்டும் திமுகவில் இணைந்தது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு தனது அரசியல் வேருக்கு அவர் திரும்பியிருப்பது, விழுப்புரம் மாவட்ட அரசியலில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media