Dailyhunt
"அவ்வளவு தான் சோலி முடிந்தது".. ஈரான் மீது கொடூர தாக்குதல்.. அதிகாலை நேரத்தில் டிரம்ப் பகிர்ந்த வீடியோ. ஆடிப்போன உலக நாடுகள்.!

"அவ்வளவு தான் சோலி முடிந்தது".. ஈரான் மீது கொடூர தாக்குதல்.. அதிகாலை நேரத்தில் டிரம்ப் பகிர்ந்த வீடியோ. ஆடிப்போன உலக நாடுகள்.!

Tamizhan media 5 days ago

ரான் தலைநகர் தெஹ்ரான் மீது அமெரிக்கா மிகப் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இதில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் மற்றும் உயர் மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வளைகுடா பிராந்தியத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரானின் ராணுவ நிலைகளைக் குறிவைத்துத் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. தற்போது நடத்தப்பட்டுள்ள இந்த நள்ளிரவுத் தாக்குதல், ஈரானின் அதிகார மையத்தைச் சிதைக்கும் நோக்கில் அமைந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் இது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ள அதிபர் டிரம்ப், தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானை தவறாக வழிநடத்திய பல முக்கிய ராணுவத் தலைவர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், விமானங்களின் இரைச்சல் மற்றும் பயங்கர வெடிச்சத்தங்கள் நிறைந்த வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். ஈரானின் மின்சார உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்தி வைப்பதற்கான காலக்கெடு நாளை (ஏப்ரல் 6) முடிவடைய உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே இந்தத் துல்லியமான தாக்குதலை அமெரிக்கா அரங்கேற்றியுள்ளது.

இருப்பினும், இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட தளபதிகள் யார்? மற்றும் எத்தனை பேர் உயிரிழந்தனர்? என்பது குறித்த விரிவான பட்டியலை வெள்ளை மாளிகை இன்னும் வெளியிடவில்லை. அதேபோல் ஈரான் தரப்பிலிருந்தும் உயர்மட்டத் தலைவர்களின் மரணம் குறித்துப் நேரடியான உறுதிப்படுத்தல் எதுவும் இதுவரை வரவில்லை. ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளான ஆர்தேஷ் கூட்டுப் படைத் தலைமையகம் மற்றும் பி1 பாலம் ஆகியவை சமீபத்தில் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போதைய இந்தத் தாக்குதல் ஈரானின் ராணுவப் பலத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இந்த மோதல் போக்கு, சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, எரிசக்தி விநியோகப் பாதுகாப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்த அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. ஈரானும் அமெரிக்காவின் தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுத்து வருவதால், இந்தப் போர்ச் சூழல் விரைவில் முடிவுக்கு வரும் அறிகுறி தென்படவில்லை. இந்தத் தொடர் மோதல்களால் வளைகுடா நாடுகள் முழுவதும் கடும் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media