Dailyhunt
"பாலிவுட் நடிகருடன் டேட்டிங்?. சொல்லாமல் சொன்ன பூஜா ஹெக்டே. பாலிவுட் முதல் கோலிவுட் வரை பற்றி எரியும் 'டேட்டிங்' மேட்டர்".!!!

"பாலிவுட் நடிகருடன் டேட்டிங்?. சொல்லாமல் சொன்ன பூஜா ஹெக்டே. பாலிவுட் முதல் கோலிவுட் வரை பற்றி எரியும் 'டேட்டிங்' மேட்டர்".!!!

Tamizhan media 1 week ago

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகர் ரோஹன் மெஹ்ராவை காதலித்து வருவதாக வெளியாகி இருக்கும் தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து வருவதாகவும், முக்கிய பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்பதகவும் சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கள் எழுந்து வந்தன. இதுவரை இந்த வதந்திகள் குறித்து இருவரும் மவுனம் காத்து வந்த நிலையில், தற்போது மீண்டும் இவர்களது நெருக்கம் குறித்த செய்திகள் தீயாய் பரவி வருகின்றன.

சமீபத்தில் மும்பையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பூஜா ஹெக்டே மற்றும் ரோஹன் மெஹ்ரா இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானதே இந்த விவாதத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதுகுறித்து எழுந்த கேள்விகளுக்குப் பதிலளித்த பூஜா ஹெக்டே, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரும் தலையிட வேண்டாம் என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு, அந்தப் பதிலானது மறைமுகமாகச் செய்தியை உறுதிப்படுத்துகிறதோ என்ற சந்தேகத்தையும் நெட்டிசன்களிடையே கிளப்பியுள்ளது.

நடிகர் ரோஹன் மெஹ்ரா, கடந்த 2018-ம் ஆண்டு சைஃப் அலிகான் நடித்த ‘பஜார்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமானவர். மேலும், புகழ்பெற்ற இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பாஜிராவ் மஸ்தானி’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். கலைப் பின்னணி கொண்ட ரோஹனுக்கும் பூஜாவுக்கும் இடையே இருப்பது வெறும் நட்பா அல்லது திருமணத்தை நோக்கிய காதலா என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன. எது எப்படியோ, பூஜா ஹெக்டேவின் இந்த புதிய ‘டேட்டிங்’ செய்தி பாலிவுட் முதல் கோலிவுட் வரை தற்போதைய ஹாட் டாபிக்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media