Dailyhunt
பஞ்சாப் சிங்கம் இனி 'சிங்கிள்' இல்லையா..? காதலியுடன் ஜாலியாகப் பயணிக்கும் அர்ஷ்தீப் சிங். வாழ்த்துகளை குவிக்கும் நெட்டிசன்கள்..!!

பஞ்சாப் சிங்கம் இனி 'சிங்கிள்' இல்லையா..? காதலியுடன் ஜாலியாகப் பயணிக்கும் அர்ஷ்தீப் சிங். வாழ்த்துகளை குவிக்கும் நெட்டிசன்கள்..!!

Tamizhan media 1 week ago

ந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் மற்றும் அவரது காதலி என்று கூறப்படும் நடிகை சமரின் கவுர் ஆகியோர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேருந்தில் ஒன்றாகப் பயணிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐதராபாத் விமான நிலையத்திற்கு இருவரும் கைகோர்த்தபடி வந்த நிலையில், பின்னர் வீரர்களுக்கான பிரத்யேகப் பேருந்திலும் சமரின் கவுர் அர்ஷ்தீப் சிங்குடன் அமர்ந்து சென்றது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமரின் கவுர் ஒரு வளர்ந்து வரும் பஞ்சாபி நடிகை மற்றும் மாடல் ஆவார். ’83’ போன்ற படங்களில் நடித்துள்ள இவர், சமீபகாலமாக பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் மைதானத்திற்கு நேரில் வந்து அர்ஷ்தீப் சிங்கிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்து வருகிறார். முன்னதாக, அர்ஷ்தீப் சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பெண்ணின் கையைப் பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்தபோதே, அது சமரின் கவுர் தான் என்று ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டனர்.

இந்த வைரல் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இந்த ஜோடி மிகவும் பொருத்தமாக இருப்பதாகப் பாராட்டி வரும் நிலையில், மற்றவர்கள் போட்டியின் தீவிரமான நேரத்தில் தனிப்பட்ட உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், இதுவரை அர்ஷ்தீப் சிங் அல்லது சமரின் கவுர் தரப்பிலிருந்து தங்களது உறவு குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media