Dailyhunt
பெண்களை வேட்டையாடும் பயங்கரவாதிகள். பாகிஸ்தான் மதகுருவின் பகிரங்க வாக்குமூலத்தால் உலகமே அதிர்ச்சி.!!!

பெண்களை வேட்டையாடும் பயங்கரவாதிகள். பாகிஸ்தான் மதகுருவின் பகிரங்க வாக்குமூலத்தால் உலகமே அதிர்ச்சி.!!!

Tamizhan media 0 months ago

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெண்களுக்கு எதிராக அரங்கேற்றப்படும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தங்களை மதப் போராளிகள் என்று அழைத்துக்கொள்ளும் பயங்கரவாதிகள், அங்குள்ள அப்பாவி முஸ்லிம் சிறுமிகள் மற்றும் பெண்களைக் மிகக் கொடூரமாகச் சுரண்டுவதாக பாகிஸ்தானைச் சேர்ந்த மதகுரு முஃப்தி சயீத் கான் பகிரங்கமாகப் பேசியுள்ளார்.

மேலும் ஒரு துண்டு ரொட்டிக்காகக் கூட பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தும் அவல நிலை அங்கு நிலவுவதாகவும், பசியைப் போக்க உணவு வழங்க வேண்டும் என்றால் அதற்குப் பதிலாகப் பாலியல் இச்சையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்குப் பெண்கள் தள்ளப்படுவதாகவும் அவர் அந்த வீடியோவில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், பாகிஸ்தானின் உண்மை முகம் மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் அம்பலமாகியுள்ளது. காஷ்மீர் விடுதலை என்ற போர்வையில் செயல்படும் பயங்கரவாதிகள், தங்கள் சொந்த மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கே இத்தகைய அநீதிகளை இழைப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுநாள் வரை பகுதியில் நடக்கும் அநீதிகளை மறைத்து வந்த பாகிஸ்தானுக்கு, அந்நாட்டின் மதகுருவே அளித்திருக்கும் இந்த வாக்குமூலம் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கும் அந்தப் பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் சர்வதேச அளவில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media