Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
BIG BREAKING: 16 திமுக அமைச்சர்கள் தோல்வி முகம். அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!

BIG BREAKING: 16 திமுக அமைச்சர்கள் தோல்வி முகம். அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!

Tamizhan media 3 weeks ago

மிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திமுக தரப்பிற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 9:30 மணி நிலவரப்படி, தமிழக அமைச்சரவையைச் சேர்ந்த 16 முக்கிய அமைச்சர்கள் தோல்வி முகத்தில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருச்சி மேற்கில் கே.என். நேரு, ராணிப்பேட்டையில் காந்தி, தூத்துக்குடியில் கீதா ஜீவன், திருவெறும்பூரில் அன்பில் மகேஸ் மற்றும் திருச்சுழியில் தங்கம் தென்னரசு உள்ளிட்ட முன்னணி அமைச்சர்கள் தங்களது தொகுதிகளில் பின்னடைவைச் சந்தித்து வருவது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில், திமுகவின் மிக முக்கியமான தலைவர்களான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

யாரும் எதிர்பாராத இந்தத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளன. திராவிடக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் அமைச்சர்களே பின்தங்கியிருப்பது தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media