Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
BIG BREAKING: செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமின். சற்றுமுன் ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு..!

BIG BREAKING: செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமின். சற்றுமுன் ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு..!

Tamizhan media 4 months ago

ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகிய இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கில் இருவருக்கும் எதிராக வலுவான மற்றும் முகாந்திரமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, காவல்துறை தரப்பில் முன்ஜாமின் வழங்கக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு தீவிர வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இருப்பினும், நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்து, இருவரும் தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கட்டாயம் கையெழுத்திட வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்த நீதிமன்ற உத்தரவின் மூலம், காவல்துறையின் உடனடி கைது நடவடிக்கையில் இருந்து செந்தில்பாலாஜியும் அவரது தம்பியும் தற்போது தப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media