தமிழகத்தில் 11-ம் வகுப்பு படிக்கும் 5.32 லட்சம் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் நவீன ரக மிதிவண்டிகளை வழங்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருத்தில் கொண்டு, இம்முறை சைக்கிளுடன் இலவசமாக ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டிலும் சேர்த்து வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான மாதிரி மிதிவண்டிகளை செப்டம்பர் 28-க்குள் சமர்ப்பிக்குமாறு நிறுவனங்களுக்குத் தமிழக அரசு டெண்டர் கோரியுள்ள நிலையில், விரைவில் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் இந்த நவீன சைக்கிள்கள் சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

