மத்திய சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.
அவரது கார் அங்கிருந்த காவலர் ஒருவரின் கால் மீது ஏறியதில், அந்த காவலருக்குக் காலில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடுமையான வலியால் துடித்துள்ளார்.
விபத்து நடந்தவுடன் அங்கிருந்த கட்சியினரும் பொதுமக்களும் காயமடைந்த காவலரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தேர்தல் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

