மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் அதன் காரணமாக உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, 41 முக்கிய பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்கான இறக்குமதி வரியை (Customs Duty) ஜூன் 30, 2026 வரை ரத்து செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
மெத்தனால், அசிட்டிக் அமிலம், வினைல் குளோரைடு மோனோமர் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களுக்கு இந்த வரி விலக்கு பொருந்தும். உள்நாட்டுத் தொழில்துறையினருக்குத் தேவையான மூலப்பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், உற்பத்திச் செலவைக் குறைக்கவும் இந்த தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வரி சலுகையின் மூலம் பிளாஸ்டிக், பேக்கேஜிங், ஜவுளி, மருந்துகள், ரசாயனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் துறைகள் பெரும் பலன் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூலப்பொருட்களின் விலை குறைவதால், இறுதி நுகர்வோருக்கும் பொருட்களின் விலை குறைந்து ஓரளவிற்கு நிம்மதி கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களிலிருந்து இந்தியத் தொழில்துறையைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்

