Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி. அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி. அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

Tamizhan media 4 hrs ago

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 'சிங்கப்பெண் அதிரடிப்படை' என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், மக்கள் அனைவரும் எவ்வித அச்சமும் இன்றி நிம்மதியாக வாழ்ந்திட, தகுதியான போலீஸ் அதிகாரிகளைத் தொடர்ந்து பணியமர்த்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெண்களுக்கு எதிராகத் தப்பு செய்பவர்களுக்குக் நீதிமன்றத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை விரைந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்காகத் தேவையான கடுமையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் அதிரடி உத்தரவிட்டுள்ளார் என்றும் இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media