மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்குகளுக்கான வட்டித் தொகை வரும் ஜூலை 15-ஆம் தேதிக்குள் வரவு வைக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில்தான் இந்த வட்டித் தொகை கணக்கில் சேர்க்கப்படும்; ஆனால், இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் சில மாதங்களுக்கு முன்பாகவே, அதாவது ஜூலை மாதமே தொழிலாளர்களின் கணக்கிற்கு வரவு வைக்கப்பட உள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 34 கோடி தொழிலாளர்கள் பயனடைய உள்ளதோடு, அவர்களின் PF கணக்குகளில் மொத்தமாக ₹1.44 கோடி தொகை (வட்டி) பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் இந்த அதிவேகமான மற்றும் வரவேற்கத்தக்க நடவடிக்கையைப் பற்றிய நல்ல செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் சக தொழிலாளர்களுக்கும் உடனே பகிர்ந்து மகிழுங்கள்!

