தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் திருச்சி கிழக்கில் இன்று வேப்பமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் தனது குடும்பத்தினருக்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் டெல்லி செல்லும் ஸ்டாலின் தமிழகத்தில் நிலவும் கேஸ் தட்டுப்பாட்டை போக்க டெல்லி சென்று கோரிக்கை விடுக்காதது ஏன் என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு பரப்புரை செய்த விஜய், தமிழகத்தில் திருமணம் ஆகும் பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படும் என்றார். மேலும் மகளிருக்கு மாதம் தோறும் 2500 ரூபாய் வழங்குவோம் எனவும் உறுதி அளித்துள்ளார்.

