Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
BREAKING: ரூ.1,200 கோடியில் பிரம்மாண்ட புதிய தலைமைச் செயலகம். சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மெகா அறிவிப்பு.!!

BREAKING: ரூ.1,200 கோடியில் பிரம்மாண்ட புதிய தலைமைச் செயலகம். சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மெகா அறிவிப்பு.!!

Tamizhan media 1 week ago

மிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், மாநிலத்தில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய அதிநவீன நிர்வாக வளாகம் அமைக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, தலைநகர் சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் இந்த புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படவுள்ளது. அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தின்கீழ் கொண்டுவந்து ஒருங்கிணைக்கும் நோக்கில் இத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய வளாகத்தில் நவீன தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் எளிதாகச் சென்று வரக்கூடிய கட்டமைப்பு வசதிகள், போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான நவீன உள்கட்டமைப்புகள் பசுமைக் கட்டடத் தரநிலைகளுக்கு உட்பட்டு ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media