Dailyhunt
BREAKING: சற்றுமுன் ஆதாரத்தை வெளியிட்டார் அண்ணியார். செம ஷாக்கில் இபிஎஸ்.!

BREAKING: சற்றுமுன் ஆதாரத்தை வெளியிட்டார் அண்ணியார். செம ஷாக்கில் இபிஎஸ்.!

Tamizhan media 3 weeks ago

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்வைத்துள்ள காட்டமான விமர்சனங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

2025-ஆம் ஆண்டில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது அப்படி எதுவும் சொல்லவில்லை என இபிஎஸ் பொய் கூறுவதாகக் குற்றம் சாட்டிய பிரேமலதா, 2024 மக்களவைத் தேர்தலின்போது இரு கட்சிகளுக்கும் இடையே போடப்பட்ட ரகசிய ஒப்பந்த நகலை முதல்முறையாக ஊடகங்களுக்கு ஆதாரமாகக் காண்பித்தார்.

தேமுதிகவை அரை சதவீத வாக்குகள் கொண்ட கட்சி என இபிஎஸ் சிறுமைப்படுத்திப் பேசுவது அரசியல் நாகரிகம் அல்ல என்று சாடிய அவர், இத்தகைய தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைக்கும் எடப்பாடி பழனிசாமி மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் ரீதியாக ‘ஐசியூ’ (ICU) செல்லும் நிலை ஏற்படும் என மிகக் கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துள்ளார். இரு கட்சிகளுக்கும் இடையிலான இந்த நேரடி மோதல், வரும் நாட்களில் கூட்டணிக் கணக்குகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media