Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
BREAKING: சற்றுமுன் WhatsApp எண். CM விஜய் அறிவித்தார். தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.!!

BREAKING: சற்றுமுன் WhatsApp எண். CM விஜய் அறிவித்தார். தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.!!

Tamizhan media 5 days ago

மிழக அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளி சீட்டுகளை ஆன்லைன் மூலமாக எளிதாகப் பெறும் புதிய மொபைல் செயலி மற்றும் தொழில்நுட்ப வசதி இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

முதலமைச்சர் விஜய் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்கள் மருத்துவமனைகளில் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் நோக்கில் இந்த சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ‘நலம் AI’ என்ற புதிய வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று தொடங்கி வைக்கிறார்.

பொதுமக்கள் தங்களின் வீட்டில் இருந்தபடியே மிக எளிதாக ஆன்லைன் முன்பதிவு செய்வதற்காக 9619222999 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மருத்துவச் சேவைகளுக்கான OP சீட்டுகளை மொபைல் மூலமாகவே விரைவாகப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப வசதி, அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை, எளிய மக்களின் நேரத்தையும் அலைச்சலையும் பெருமளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media