விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில், மருந்து கலவை தயாரிக்கும் பணியின் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடி விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் பலத்த தீக்காயமடைந்த மற்றொருவர் உடனடியாக மீட்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

