Dailyhunt
BREAKING: தவெகவில் அடுத்த துயரம்.. 21 பேர் படுகாயம்.. தமிழகத்தில் காலையிலேயே ஷாக்.!

BREAKING: தவெகவில் அடுத்த துயரம்.. 21 பேர் படுகாயம்.. தமிழகத்தில் காலையிலேயே ஷாக்.!

Tamizhan media 2 weeks ago

மிழக வெற்றிக் கழகத்தின் குன்னூர் தொகுதி வேட்பாளர் தங்கராஜுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கச் சென்ற தொண்டர்கள் பயணித்த மினி பஸ், எதிர்பாராதவிதமாக 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த 21 பேரும் மீட்கப்பட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சித் தலைமையையும் தொண்டர்களையும் இந்த அடுத்தடுத்த விபத்துகள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

ஏற்கனவே கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரம் மறைவதற்குள் தஞ்சை, புதுச்சேரி மற்றும் தற்போது குன்னூர் என வரிசையாக தொண்டர்கள் வாகன விபத்துகளில் சிக்கி வருவது அக்கட்சியினரிடையே மிகுந்த கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தொண்டர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media