Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
BREAKING: உலகத் தரம் வாய்ந்த 'தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்' உருவாக்கப்படும். வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்.!!

BREAKING: உலகத் தரம் வாய்ந்த 'தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்' உருவாக்கப்படும். வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்.!!

Tamizhan media 1 week ago

மிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், தலைநகர் சென்னையில் உலகத் தரம் வாய்ந்த 'தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்' உருவாக்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார்.

தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளைத் தமிழ்நாட்டில் நடத்தும் வகையில் இந்த ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக விளையாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சர்வதேச தரத்திலான ‘மோட்டார் ரேஸ் கார் சிட்டி’ உருவாக்கப்பட்டு, கார் பந்தயத்திற்கான அதிநவீன கட்டமைப்புகளும் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.

மேலும், இந்த வளாகத்தில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள், உயர்தர செயல்திறன் மையம், விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவ மையங்கள், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிட வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்படவுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்வதை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media