Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"CM விஜய்யை உடனே கைது பண்ணுங்க".. பனையூர் பாபு வீசிய திடீர் வெடிக்குண்டு. அரசியலில் அதிரடி ட்விஸ்ட்.. பரபரப்பு.!

"CM விஜய்யை உடனே கைது பண்ணுங்க".. பனையூர் பாபு வீசிய திடீர் வெடிக்குண்டு. அரசியலில் அதிரடி ட்விஸ்ட்.. பரபரப்பு.!

Tamizhan media 1 week ago

மிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள எம்.எல்.ஏ-க்கள் குதிரை பேரக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் மு.பாபு புதிய அதிரடிப் புகார் ஒன்றை எழுப்பியுள்ளார்.

தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மதிமுக எம்.எல்.ஏ-க்கள் இருவரை ராஜினாமா செய்யச் சொன்னதாக முதல்வர் விஜய் மீது வைகோ பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதனை ஒரு முக்கிய வாக்குமூலமாக ஆதாரமாகக் கொண்டு, முதல்வர் விஜய் மற்றும் வைகோ ஆகிய இருவர் மீதும் போலீசார் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பனையூர் பாபு வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் வசம் இழுக்க தி.மு.க குதிரை பேரம் நடத்தியதாக தவெக தரப்பில் பரப்பப்படும் அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சட்டவிரோதமாக மற்ற கட்சி மக்கள் பிரதிநிதிகளை ராஜினாமா செய்ய வற்புறுத்திய முதல்வர் விஜய் மீதே சட்டம் தன் கடமையைச் செய்ய ஏன் தயங்குகிறது என்ற கேள்வியோடு இந்த அரசியல் குண்டை அவர் வீசியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media