Dailyhunt
டேய் எனக்கு சிகரெட் தர மாட்டியா..? எட்டி வெளியே உதைத்தத்தில் பயணி துடிதுடித்து பலி. ஓடும் ரயிலில் நடந்த பயங்கரம். அதிர்ச்சி வீடியோ வைரல்.!!!

டேய் எனக்கு சிகரெட் தர மாட்டியா..? எட்டி வெளியே உதைத்தத்தில் பயணி துடிதுடித்து பலி. ஓடும் ரயிலில் நடந்த பயங்கரம். அதிர்ச்சி வீடியோ வைரல்.!!!

Tamizhan media 1 week ago

பிரயாக்ராஜ் அருகே ஓடும் ரயிலில் சிகரெட் தராத ஆத்திரத்தில் பயணி ஒருவர் மற்றொருவரை எட்டி உதைத்து வெளியே தள்ளியதில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் பயணம் செய்தபோது இருவருக்கு இடையே சிகரெட் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் உச்சகட்டமாக ஆத்திரமடைந்த நபர் சக பயணியை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தத் துயரச் சம்பவம் ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக ரயில் பெட்டிகள் போர்க்களம் போல மாறி வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் ரயில்வே நிர்வாகம் இருந்தாலும், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்வது ரயில் பயணத்தை பாதுகாப்பற்றதாக மாற்றியுள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media