Dailyhunt
டிராபிக் போலீஸ் கிட்ட இருந்து தப்பிக்க இதோ ஒரு சீக்ரெட் டிப்ஸ். வாகன ஓட்டிகள் கவனத்திற்கு. இதோ அதிரடி தகவல்..!!!

டிராபிக் போலீஸ் கிட்ட இருந்து தப்பிக்க இதோ ஒரு சீக்ரெட் டிப்ஸ். வாகன ஓட்டிகள் கவனத்திற்கு. இதோ அதிரடி தகவல்..!!!

Tamizhan media 2 weeks ago

ந்தியாவில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கும் அதிகாரம் அனைத்து காவலர்களுக்கும் கிடையாது என்பதை வாகன ஓட்டிகள் புரிந்துகொள்வது அவசியமாகும்.

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, உதவி ஆய்வாளர் அல்லது அதற்கு மேலான பதவியில் இருக்கும் அதிகாரிகளே நேரடியாக அபராதம் விதிக்க முடியும். சாலையில் பணியில் இருக்கும் சாதாரண காவலர்கள் அல்லது தலைமை காவலர்கள் உங்கள் வாகனத்தை நிறுத்தி ஆவணங்களைச் சரிபார்க்கலாமே தவிர, அவர்கள் நேரடியாக சலான் வழங்க சட்டப்படி அதிகாரம் இல்லை.

மேலும் அவ்வாறு அபராதம் விதிக்க வேண்டுமானால், அவர்களுடன் உயர் அதிகாரி ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், காவலர்கள் உங்கள் வாகனத்தின் சாவியை வலுக்கட்டாயமாகப் பறிக்கக் கூடாது என்பதும் முக்கியமான சட்ட உரிமையாகும். காவலர்களின் பதவியை அவர்களின் சீருடையில் உள்ள நட்சத்திரங்களைக் கொண்டே எளிதாக அடையாளம் காணலாம். சீருடையின் தோள்பட்டையில் நட்சத்திரங்கள் ஏதும் இல்லை என்றால் அவர் ஒரு காவலர் அவருக்கு அபராதம் விதிக்க அதிகாரம் இல்லை.

ஒரு நட்சத்திரம் இருந்தால் அவர் உதவி ஆய்வாளர் இரண்டு நட்சத்திரங்கள் இருந்தால் துணை ஆய்வாளர், மற்றும் மூன்று நட்சத்திரங்கள் இருந்தால் அவர் ஆய்வாளர் ஆவார். இந்த மூன்று நிலைகளில் உள்ள அதிகாரிகளுக்கும் விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிக்கும் முழு உரிமை உண்டு. ஒருவேளை தகுதியற்ற காவலர் உங்களிடம் அபராதம் கேட்டு வற்புறுத்தினாலோ அல்லது தவறாக நடந்துகொண்டாலோ, அவர்களின் பெயர் மற்றும் பதவியைக் குறித்துக்கொண்டு உயர் அதிகாரிகளிடமோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ புகார் அளிக்க வாகன ஓட்டிகளுக்கு உரிமை உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media