Dailyhunt
"எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு.. என் பொண்டாட்டிய பத்தி நீ எப்படி பேசலாம்?". ட்ரம்ப்பை நேருக்கு நேர் வறுத்தெடுத்த பிரெஞ்சு அதிபர் மேக்ரான்..!

"எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு.. என் பொண்டாட்டிய பத்தி நீ எப்படி பேசலாம்?". ட்ரம்ப்பை நேருக்கு நேர் வறுத்தெடுத்த பிரெஞ்சு அதிபர் மேக்ரான்..!

Tamizhan media 1 week ago

மெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இடையேயான அரசியல் மோதல், தற்போது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சிதைக்கும் தரமற்ற விமர்சனமாக உருவெடுத்து உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு மதிய விருந்தின் போது, மேக்ரானின் மனைவி பிரிஜிட் மேக்ரான் குறித்து ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கள் இந்த விரிசலை அதிகப்படுத்தியுள்ளன. குறிப்பாக, 2025-ல் வைரலான ஒரு வீடியோவில் பிரிஜிட் மேக்ரான் தனது கணவரின் முகத்தைத் தள்ளுவது போன்ற காட்சியைச் சுட்டிக்காட்டிய ட்ரம்ப், "பிரெஞ்சு அதிபர் இன்னும் அந்தத் தாடையின் அடி வாங்கின அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை" என மிக மோசமாகக் கிண்டல் செய்துள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த அநாகரீகமான பேச்சுக்கு, தற்போது தென்கொரியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மேக்ரான் மிகக் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார். "அமெரிக்க அதிபர் அளவுக்கு அதிகமாகப் பேசுகிறார்; அவருடைய பேச்சு கண்ணியமற்றது மற்றும் தரமற்றது" என அவர் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நிலவி வந்த ராஜதந்திர மோதல், இப்போது ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் தாக்கும் நிலைக்குச் சென்றிருப்பது சர்வதேச அரசியல் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் பிரான்ஸ் நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் ரீதியாக மேக்ரானை எதிர்ப்பவர்கள் கூட, ட்ரம்ப்பின் இந்தத் தரம்தாழ்ந்த விமர்சனத்தை வன்மையாகக் கண்டித்து வருகின்றனர். “உலகத் தலைவர்கள் பருவநிலை மாற்றம், பாதுகாப்பு போன்ற முக்கியமான உலகளாவிய பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, ஒருவரது குடும்ப வாழ்க்கையை விமர்சிக்கக் கூடாது” என அந்நாட்டு அரசியல் தலைவர்கள் கொந்தளித்து வருகின்றனர். ட்ரம்ப்பின் இந்தச் செயல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media