Dailyhunt
"என் பிள்ளை சாவுக்கு நானே காரணம்" குற்ற உணர்ச்சியா இருக்கு. "நானும் சாகப்போறேன்" கணவருக்கு கடிதம் எழுதிவிட்டு இளம்தாய் தற்கொலை..!!

"என் பிள்ளை சாவுக்கு நானே காரணம்" குற்ற உணர்ச்சியா இருக்கு. "நானும் சாகப்போறேன்" கணவருக்கு கடிதம் எழுதிவிட்டு இளம்தாய் தற்கொலை..!!

Tamizhan media 1 week ago

பெங்களூருவில் தனது 11 மாதக் குழந்தை வாலித் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சோகத்தில், தாய் பிரதீபா (29) தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதீபா மாடிக்குச் சென்ற நேரத்தில், வீட்டில் இருந்த குழந்தை எதிர்பாராதவிதமாகத் தண்ணீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தது. தனது கவனக்குறைவே குழந்தையின் மரணத்திற்குத் தார்மீகக் காரணம் என்ற கடுமையான குற்ற உணர்வில் இருந்த அவர், இந்தத் தீவிர முடிவை எடுத்துள்ளார்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாகத் தனது கணவரிடம் மன்னிப்புக் கேட்டு பிரதீபா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தை மீட்டுள்ள காவல்துறையினர், இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் தாயும், குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media