பீகார் மாநிலம் நவாடா பகுதியைச் சேர்ந்தவர் ஹிமான்ஷு ராஜ். ஐஐடி பாட்னா பட்டதாரியான இவரது குடும்பத்தின் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நிகழ்ந்த தாக்குதல் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கை வாபஸ் பெற்று சமரசத்திற்கு வர வற்புறுத்தி, ஹிமான்ஷு ராஜின் குடும்பத்தினர் மற்றும் அவரது தங்கை மீது மீண்டும் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தும் உள்ளூர் போலீசார் எந்தவொரு முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து, உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு நவாடா பொலிஸாருக்கு பீகார் மாநிலக் தலைமைப் போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

