Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
என்னம்மா இது.? மனசாட்சியே இல்லையா உங்களுக்கு.! கையில் குழந்தையுடன் ஆமை மீது ஏறி நின்ற பெண்.. இணையத்தில் கண்டனத்தை குவிக்கும் வீடியோ.!!

என்னம்மா இது.? மனசாட்சியே இல்லையா உங்களுக்கு.! கையில் குழந்தையுடன் ஆமை மீது ஏறி நின்ற பெண்.. இணையத்தில் கண்டனத்தை குவிக்கும் வீடியோ.!!

Tamizhan media 1 week ago

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள சாங்லு சுற்றுலாப் பூங்காவில், பெண் ஒருவர் குழந்தையை கையில் ஏந்தியபடி ஆப்பிரிக்க வகை ஆமையின் மீது ஏறி நின்ற வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.

ஆமைகள் மீது ஏறக்கூடாது என்ற எச்சரிக்கைப் பலகை இருந்தும், பூங்கா ஊழியர்கள் த தடுக்காத நிலையில் அந்தப் பெண் மற்றொரு சிறுவனையும் ஆமையின் மீது ஏற்றுமாறு அழைத்துள்ளார். மனிதர்களின் எடையால் ஆமையின் முதுகெலும்பு மற்றும் உள் உறுப்புகள் சேதமடையும் என விலங்கு ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பூங்கா நிர்வாகம் அந்த ஆமையை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியது. அதில் ஆமை ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. பூங்கா நிர்வாகம் தனது கண்காணிப்புக் குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media