அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் பங்கேற்காமல் தவிர்த்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக அதிமுகவின் சில எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வரும் நிலையில், பாலகிருஷ்ணனின் இந்த திடீர் சுணக்கம் பல்வேறு ஊகங்களைக் கிளப்பியுள்ளது.
கட்சித் தலைமையின் மிக முக்கியமான இந்த ஆலோசனைக் கூட்டத்தை அவர் புறக்கணித்ததன் பின்னணியில், அவரும் தவெகவுக்குத் தாவும் திட்டத்தில் இருக்கிறாரோ என்ற கேள்விகளும், சந்தேகங்களும் அதிமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் தற்போது வலுவாக எழுந்துள்ளன.

