Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஹேப்பி மூட்.! கிரிக்கெட் ஸ்டார்ஸ் கிடையாது. இப்போ நாங்க ஸ்கூல் பிரண்ட்ஸ்.! இணையத்தைக் கொள்ளையடிக்கும். சஞ்சு சாம்சனின் கியூட் வீடியோ.!!

ஹேப்பி மூட்.! கிரிக்கெட் ஸ்டார்ஸ் கிடையாது. இப்போ நாங்க ஸ்கூல் பிரண்ட்ஸ்.! இணையத்தைக் கொள்ளையடிக்கும். சஞ்சு சாம்சனின் கியூட் வீடியோ.!!

Tamizhan media 1 week ago

ந்திய கிரிக்கெட் வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பயணத்தின் போது 'பென் ஃபைட்' விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வேகமாக வைரலாகி வருகிறது.

சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் பெஞ்சின் மேல் பேனாக்களை வைத்து மோதவிட்டு விளையாடும் இந்த விளையாட்டை, தற்போதைய இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விளையாடுவது பலருக்கும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில், சஞ்சு சாம்சன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் தங்கள் பயண நேரத்தின் போது, தீவிரமான கவனத்துடன் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு பேனாவை நகர்த்தி விளையாடுவதைக் காண முடிகிறது. சர்வதேச அளவில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள், தங்களின் டென்ஷன் நிறைந்த அட்டவணைக்கு மத்தியிலும், இப்படி ஒரு எளிமையான விளையாட்டை விளையாடி மகிழ்வது அவர்களின் குழந்தைத்தனமான பக்கத்தை வெளிப்படுத்துகிறது.

தற்போது வைரலாகி வரும் இந்த நெகிழ்ச்சியான வீடியோ, 90ஸ் கிட்ஸ் மற்றும் 2k கிட்ஸ்களின் பள்ளிப்பருவ நினைவுகளை மீண்டும் தட்டி எழுப்பியுள்ளது. "நாங்கள் பள்ளியில் விளையாடியதை இவர்களும் விளையாடுகிறார்கள்" என்றும், "எவ்வளவு பெரிய கிரிக்கெட் ஸ்டாராக இருந்தாலும் நமக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கும் என்பதை இவர்கள் நிரூபித்துவிட்டார்கள்" என்றும் ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் குவித்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media