Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இனி இவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாதா? வெளியானது அதிர்ச்சித் தகவல். தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!

இனி இவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாதா? வெளியானது அதிர்ச்சித் தகவல். தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!

Tamizhan media 1 week ago

மிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, சுமார் 6 லட்சம் பேர் புதிய குடும்ப அட்டை எப்போது கிடைக்கும் என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 37,328 ரேஷன் கடைகள் மூலம், ஏற்கனவே 2 கோடியே 28 லட்சத்திற்கும் அதிகமான கார்டுதாரர்களுக்கு விலையில்லா அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில் மற்றும் துவரம்பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுமார் 7 கோடி மக்கள் பயனடைந்து வரும் சூழலில், ரேஷன் கார்டு என்பது வெறும் பொருட்களை வாங்கும் அட்டை மட்டுமே கிடையாது; அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் முதன்மையான அடையாளச் சான்றாகத் திகழ்வதால், பொதுமக்கள் புதிய கார்டுகளைப் பெறுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மார்ச் இறுதி வரை இந்தத் தடை நீடித்தது. அதன் பிறகு பணிகள் தொடங்கப்பட்டாலும், கடந்த சில மாதங்களாகப் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெறவில்லை என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, கடந்த மார்ச் மாதம் வரை சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் தள்ளுபடி செய்யப்பட்ட 21,000 மனுக்கள் தவிர, மற்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பரிசீலனையில் வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் மேலும் 3 லட்சம் விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமைத் துறைக்கு வந்துள்ளதால், தற்போது மொத்தம் சுமார் 6 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

இதுகுறித்து அரசு அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “முன்னதாக விண்ணப்பித்து தகுதிபெற்ற 3 லட்சம் புதிய ரேஷன் கார்டுகளை அச்சடிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், அதற்குப் பிறகு பெறப்பட்ட 3 லட்சம் விண்ணப்பங்கள் இன்னும் அடுத்தகட்ட பரிசீலனைக்கு வரவில்லை. பொதுவாக, ஒருவருக்குப் புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும் எனில் 7 முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக, ஒரே கதவு எண் கொண்ட வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதாகக் கூறி விண்ணப்பிக்கும்போது, புதிய கார்டு வழங்குவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன. எனவே, அதிகாரிகள் நேரில் சென்று முழுமையாக ஆய்வு செய்து, கள விசாரணை நடத்திய பிறகே ஒப்புதல் அளிக்க முடியும் என்பதால் தான் இந்தத் தாமதம் ஏற்படுகிறது” என்று விளக்கமளித்துள்ளனர்.

இத்தகைய சூழலில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உணவுத்துறை தொடர்பான உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஏழை எளிய முதியவர்களுக்கு உதவும் வகையில், ஏற்கனவே அமலில் உள்ள 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டிலேயே ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் வயது வரம்பை 60 ஆகக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான புதிய முதியவர்கள் பயன்பெறுவர் என்றும், இத்திட்டத்தை விரிவுபடுத்தத் தேவையான நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், நிலுவையில் உள்ள புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகளையும் அரசு விரைந்து முடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் பலத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media