Dailyhunt
"இனி வயதான காலத்தில் கவலை வேண்டாம்!. மாதம் ரூ.5000 பென்சன் உறுதி. மத்திய அரசின் சூப்பர் ஹிட் ஸ்கீம். கணவன் - மனைவி இருவருக்கும் பென்சன் தரும் அதிரடி திட்டம்".!!!!

"இனி வயதான காலத்தில் கவலை வேண்டாம்!. மாதம் ரூ.5000 பென்சன் உறுதி. மத்திய அரசின் சூப்பர் ஹிட் ஸ்கீம். கணவன் - மனைவி இருவருக்கும் பென்சன் தரும் அதிரடி திட்டம்".!!!!

Tamizhan media 1 week ago

த்திய அரசின் அடல் பென்சன் திட்டம் (APY) தற்போது இந்தியாவில் மிக முக்கியமான சமூகப் பாதுகாப்புத் திட்டமாக உருவெடுத்துள்ளது.

2015 மே 9 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம், இதுவரை 9 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களைப் பெற்று ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. குறிப்பாக 2025-26 நிதியாண்டில் மட்டும் சுமார் 1.35 கோடி புதிய உறுப்பினர்கள் இதில் இணைந்துள்ளனர். இது இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு நிதியாண்டில் எட்டப்பட்ட மிக உயர்ந்த சேர்க்கை அளவாகும்.

அமைப்புசாரா துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இத்திட்டம் விளங்குகிறது. இதன் சிறப்பம்சமே அரசு உத்தரவாதம் அளிக்கும் ஓய்வூதியம் தான். இத்திட்டத்தில் சேரும் நபர்கள் 60 வயதை அடைந்த பிறகு, அவர்கள் செய்த முதலீட்டிற்கு ஏற்ப மாதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை நிலையான ஓய்வூதியத்தைப் பெற முடியும். இந்தத் திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) சிறப்பாக நிர்வகித்து வருகிறது.

இத்திட்டத்தில் உள்ள மற்றொரு முக்கிய அம்சம் குடும்பப் பாதுகாப்பு ஆகும். ஒருவேளை பயனாளி இறந்துவிட்டால், அவரது வாழ்க்கைத் துணைக்கு அதே ஓய்வூதியத் தொகை தொடர்ந்து வழங்கப்படும். கணவன், மனைவி இருவருமே இறந்துவிடும் சூழலில், பயனாளி 60 வயது வரை சேமித்த முழுத் தொகையும் அவர்களால் நியமிக்கப்பட்ட வாரிசுதாரருக்கு (Nominee) திரும்பத் தரப்படும். இதனால் முதலீடு செய்யும் பணம் எங்கும் வீணாகாமல் குடும்பத்திற்கே சென்றடைகிறது.

18 முதல் 40 வயதுக்குட்பட்ட அனைத்து இந்தியக் குடிமக்களும் இந்தத் திட்டத்தில் சேரத் தகுதியானவர்கள். குறிப்பாக ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்காக வடிவமைக்கப்பட்ட இத்திட்டத்தில், வருமான வரி செலுத்துபவர்கள் சேர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த முதலீட்டில் முதுமைக் காலத்தில் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய விரும்புவோருக்கு, இந்த அடல் பென்சன் திட்டம் ஒரு சிறந்த தன்னார்வ சேமிப்புத் திட்டமாகத் திகழ்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media