ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சின்சினாடா பாலம் அருகே பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் சோகச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
தனுக்கு மண்டலம் வேல்பூர் பகுதியைச் சேர்ந்த தொட்டா சாய் (29) மற்றும் அவரது மனைவி சிரிஷா (28) ஆகிய தம்பதியினர், தங்களது 3 வயதுக் குழந்தையுடன் ஸ்கூட்டரில் சின்சினாடா பாலத்திற்கு வந்துள்ளனர்.
பாலத்தின் மீது ஸ்கூட்டரை நிறுத்திய தம்பதி, 3 வயதுக் குழந்தையை ஸ்கூட்டரிலேயே விட்டுவிட்டு, இருவரும் திடீரெனக் கோதாவரி ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டனர். இருள் சூழ்ந்த குளிரில் ஸ்கூட்டரில் தனியாக அமர்ந்து “அம்மா… அப்பா…” என்று கதறி அழுதபடி தவித்துக் கொண்டிருந்த சிறு குழந்தையைக் கண்டு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் கண்ணீர் விட்டு நெகிழ்ந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையைப் மீட்டு, ஆற்றில் குதித்த தம்பதியைத் தேடும் பண தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

