Dailyhunt
இது என்ன புதுசா இருக்கு?. தலையிலேயே உதயசூரியன். இளைஞரின் நூதன தேர்தல் பரப்புரை. இணையத்தை கலக்கும் வீடியோ.!

இது என்ன புதுசா இருக்கு?. தலையிலேயே உதயசூரியன். இளைஞரின் நூதன தேர்தல் பரப்புரை. இணையத்தை கலக்கும் வீடியோ.!

Tamizhan media 1 week ago

மிழகத்தில் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வேட்பாளர்களுக்கு இணையாகத் தொண்டர்களும் விதவிதமான பாணிகளில் பரப்புரை செய்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், திமுக மீதான தனது தீவிரப் பற்றை வெளிப்படுத்தும் விதமாகத் தனது தலையின் பின்புறத்தில் 'உதயசூரியன்' சின்னம் வடிவிலேயே தலைமுடியை வெட்டி, அதற்கு வர்ணம் பூசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சலூன் கடையில் பல மணிநேரம் பொறுமையாக அமர்ந்து, மிகத் துல்லியமான கலைநயத்துடன் செதுக்கப்பட்ட இந்த நூதனப் பிரச்சாரத்தைக் காண அந்தப் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்த இளைஞரின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் "வைரல்" ஆகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். "அரசியல் ஆர்வம் எத்தனையோ வித்தைகளைச் செய்ய வைக்கும் என்பதற்கு இந்தத் திருச்செங்கோடு இளைஞரே சாட்சி" எனப் பலரும் பாராட்டி வருகின்றனர். கட்சிப் பாசத்திற்காகத் தன்னை ஒரு நடமாடும் பிரச்சாரக் கருவியாக மாற்றிக்கொண்ட இந்த இளைஞரின் செயல், தேர்தல் களத்தில் ஒரு சுவாரசியமான பேசுபொருளாக மாறியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media