Dailyhunt
ITI படித்திருந்தால் போதும். இந்தியக் கடற்படையில் வேலை. 240 காலி பணியிடங்கள். ஏப்ரல் 17 கடைசி நாள். உடனே அப்ளை பண்ணுங்க.!!

ITI படித்திருந்தால் போதும். இந்தியக் கடற்படையில் வேலை. 240 காலி பணியிடங்கள். ஏப்ரல் 17 கடைசி நாள். உடனே அப்ளை பண்ணுங்க.!!

Tamizhan media 3 days ago

ந்தியக் கடற்படையின் கப்பல் பழுதுபார்க்கும் தளம் மற்றும் கடற்படை விமானத் தளத்தில் காலியாக உள்ள 240 அப்ரெண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பிட்டர் பிரிவில் 31 இடங்கள், எலக்ட்ரீசியன் பிரிவில் 29 இடங்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பிரிவில் 21 இடங்கள் மற்றும் எலக்ட்ரானிக் மெக்கானிக் பிரிவில் 18 இடங்கள் எனப் பல்வேறு தொழில்நுட்பப் பிரிவுகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர வெல்டர் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் போன்ற பிரிவுகளிலும் கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த அப்ரெண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ. (ITI) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமாகும். வயது வரம்பைப் பொறுத்தவரை, ஜூன் 1, 2026 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான கல்வித் தகுதியும் வயது வரம்பும் கொண்டவர்கள் இந்தியக் கடற்படையின் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்க சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய முறைகள் பின்பற்றப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைத் துல்லியமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான ஆவணங்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டியது அவசியமாகும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: "The Admiral Superintendent (for Officer-in-Charge ATS), Apprentices Training School, Naval Ship Repair Yard, Naval Base, Kochi - 682 004". இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஏப்ரல் 17, 2026 ஆகும். இது குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் தெளிவு பெற விரும்புவோர் rdsdekerala.dgt.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்வையிடலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media