Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஜப்பான் ரயில் நிலையத்தையே திரும்பிப் பார்க்க வைத்த நபர். தமிழரின் பாரம்பரிய உடையோடு மாஸ் காட்டிய ஸ்ரீதர் வேம்பு. நெட்டிசனை வாயடைக்க வைத்த தமிழ்நாட்டு பில்லியனர். வைரல் வீடியோ.!

ஜப்பான் ரயில் நிலையத்தையே திரும்பிப் பார்க்க வைத்த நபர். தமிழரின் பாரம்பரிய உடையோடு மாஸ் காட்டிய ஸ்ரீதர் வேம்பு. நெட்டிசனை வாயடைக்க வைத்த தமிழ்நாட்டு பில்லியனர். வைரல் வீடியோ.!

Tamizhan media 1 week ago

ஜோஹோ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனரும், தமிழகத்தைச் சேர்ந்த பில்லியனருமான ஸ்ரீதர் வேம்பு, ஜப்பான் ரயில் நிலையத்தில் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு ரயிலைப் பிடிக்க அவசரமாக ஓடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருந்தாலும், ஆடம்பரங்களை தவிர்த்து, எப்போதும் எளிமையான வாழ்க்கையையே அவர் வாழ்ந்து வருகிறார். வழக்கமாக கோட்-சூட் அணிவதைத் தவிர்த்து, தமிழர் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிவதையே பெருமையாகக் கருதும் ஸ்ரீதர் வேம்பு, தனது ஜப்பான் பயணத்தின் போதும் அதையே பின்பற்றி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த சுவாரசியமான வீடியோவை ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “ரயிலைப் பிடிக்க ஓடுவதைத் தவிர்த்து வேறு எதாலும் நாம் ஜப்பானில் இருப்பதை உணர்த்த முடியாது” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானில் உள்ள ரயில் நிலையங்கள் எப்போதும் பரபரப்பாகவும், மக்கள் ரயிலைப் பிடிக்க ஓடிக்கொண்டும் இருப்பது வழக்கம் என்பதால், அவரும் அந்த பாணியிலேயே ஓடியுள்ளார். வேஷ்டி கட்டிக்கொண்டு ஓடுவது மிகவும் சிரமமான காரியம் என்றாலும், அதை அவர் சாதாரணமாகச் செய்ததைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரது எளிமையைப் பாராட்டி வருகின்றனர். இதில் நெட்டிசன் ஒருவர், “நீங்கள் உண்மையிலேயே வேஷ்டி அணிந்துதான் ஜப்பான் சென்றீர்களா? அது எப்படி சாத்தியமானது?” என்று கேட்ட கேள்விக்கு, “ஆமாம், ஏன் சாத்தியமில்லை?” என்று ஸ்ரீதர் வேம்பு நறுக்கென்று பதிலளித்துள்ளது வைரலாகி வருகிறது.

பரபரப்பான இந்த ரயில் பயணத்திற்கு இடையே, ஸ்ரீதர் வேம்பு மற்றொரு நெகிழ்ச்சியான பதிவையும் பகிர்ந்துள்ளார். மோட்டார் வாகனத் துறையின் ‘லிவ்விங் லெஜண்ட்’ என்று அழைக்கப்படும் ஜப்பானின் புகழ்பெற்ற பொறியாளர் யோஷிபுமி ஷிமகாகி என்பவரை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். சர்வதேச அளவில் இத்தனை பெரிய உயரங்களை எட்டிய பிறகும், தனது பாரம்பரியத்தையும் எளிமையையும் விட்டுக்கொடுக்காமல் ஜப்பான் மண்ணிலும் வேஷ்டி சட்டையுடன் வலம் வரும் ஸ்ரீதர் வேம்புவின் இந்த குணம், உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்குப் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media