Dailyhunt
#JUST IN: நள்ளிரவில் விஜய்க்கு அதிர்ச்சி. த.வெ.க வேட்பாளர் அலுவலகத்திற்கு தீ வைப்பு. பெரும் பரபரப்பு.!

#JUST IN: நள்ளிரவில் விஜய்க்கு அதிர்ச்சி. த.வெ.க வேட்பாளர் அலுவலகத்திற்கு தீ வைப்பு. பெரும் பரபரப்பு.!

Tamizhan media 2 weeks ago

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், அக்கட்சியின் ஊடகப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீரங்கம் ரமேஷின் தேர்தல் அலுவலகம் இன்று அதிகாலை மர்ம நபர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தநல்லூர் ஒன்றியம் பெட்டவாய்த்தலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இந்த அலுவலகம் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததோடு, அங்கிருந்த கட்சிப் பதாகைகளும் கிழிக்கப்பட்ட நிலையில், இது குறித்து காவல்துறையில் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வேட்பாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், எதிர்க்கட்சியினர் வாக்கு எண்ணும் நாளன்று வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இதனால் வாக்கு எண்ணிக்கை நேர்மையாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுமா என்ற அச்சம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வதுடன், வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்கி ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைமுறைகள் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media