விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தனது நிபந்தனையற்ற ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் குடந்தை அரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கமாகப் பெரிய கட்சிகள் தங்களின் செல்வாக்கு மிகுந்த தொகுதிகளில் உள்ள வாக்குகளைப் அறுவடை செய்வதற்காகவே தங்களை அணுகுவதாகவும், ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரைத் தனது கட்சியின் கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டுள்ள விஜய்யின் தவெக-வின் நிலைப்பாட்டை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சாதியற்ற, சமத்துவ அரசியலை முன்னிறுத்தும் தவெக-வின் இந்த கொள்கை முடிவுகளுக்காகவே எவ்வித நிபந்தனையுமின்றி ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளதாக அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஆதரவு அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாகத் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலைப் பிரதிபலிக்கும் அமைப்புகளிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

