தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3,518 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். இந்தப் பயிற்சியானது சென்னை, திருச்சி, மதுரை மற்றும் சேலம் உள்ளிட்ட பல்வேறு கோட்டங்களில் வழங்கப்பட உள்ளது.
இதில் சேர விரும்புவோர் பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சியுடன் தொடர்புடைய பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் மாதம் 6,000 முதல் 7,000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
இந்தப் பயிற்சி முடிப்பவர்களுக்கு ரயில்வேயில் லெவல்-1 பணியிடங்களுக்கான நேரடி நியமனத்தின் போது 20% இடஒதுக்கீடு முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வயது வரம்பாக 15 முதல் 24 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செப்டம்பர் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

