Dailyhunt
காலையிலேயே பரபரப்பு. 5,000-க்கும் குறைவான வாக்குகள்.. தளபதி ஆடும் ஆடுபுலி ஆட்டம். ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்த அந்த ரிப்போர்ட்!

காலையிலேயே பரபரப்பு. 5,000-க்கும் குறைவான வாக்குகள்.. தளபதி ஆடும் ஆடுபுலி ஆட்டம். ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்த அந்த ரிப்போர்ட்!

Tamizhan media 2 weeks ago

2021 சட்டமன்றத் தேர்தலில் தி.நகர், தென்காசி, காட்பாடி உள்ளிட்ட 24 தொகுதிகளில் திமுக 5,000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே நூலிழையில் வெற்றி பெற்றது.

தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முறைப்படி களமிறங்குவதால், இந்த நெருக்கமான தொகுதிகளில் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு வெற்றி-தோல்வி முடிவுகள் தலைகீழாக மாறக்கூடும் என்ற அரசியல் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, தவெக பிரிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஆளுங்கட்சியின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், கடந்த முறை சொற்ப வாக்குகளில் தப்பிய அந்த 24 தொகுதிகளின் நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் தரப்பு மிகுந்த கவனத்துடனும், ஒருவிதமான அரசியல் அதிர்ச்சியுடனும் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இது வரவிருக்கும் தேர்தலில் திமுகவிற்கு பெரும் சவாலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media