Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கார் வழிமறிப்பு.. சரமாரி துப்பாக்கிச் சூடு.! கூலிப்படையை ஏவி ஸ்கெட்ச் போட்டது யார்?.. மேற்கு வங்க முதலமைச்சரின் உதவியாளர் கொலையில் திடுக்கிடும் திருப்பம்.!!

கார் வழிமறிப்பு.. சரமாரி துப்பாக்கிச் சூடு.! கூலிப்படையை ஏவி ஸ்கெட்ச் போட்டது யார்?.. மேற்கு வங்க முதலமைச்சரின் உதவியாளர் கொலையில் திடுக்கிடும் திருப்பம்.!!

Tamizhan media 1 week ago

மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் தனிச் செயலாளரான சந்திரநாத் ரத், கடந்த மே மாதம் 6-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டது அவரது நம்பிக்கைக்குரிய உதவியாளரான சாகர் சோங்கர் என்பது சிபிஐ விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சந்திரநாத்தை ஒழித்துவிட்டு, முதலமைச்சருக்கு மிகவும் நெருக்கமான அதிகார மையமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற பேராசையே இந்தக் கொடூரக் கொலைக்கு முக்கியக் காரணமாகும்.

இதற்காகப் பல மாதங்களாகத் திட்டமிட்ட சாகர், தனது சகோதரர் சாஹெப் மற்றும் நண்பர் விகாஷ் மிஸ்ரா ஆகியோர் மூலமாகக் கூலிப்படையை அமர்த்தியுள்ளார். போலி முகவரியில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள், எஞ்சின் எண்கள் அழிக்கப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தக் குற்றச் செயலை அரங்கேற்றியுள்ளனர். சம்பவத்தன்று, ஃபேஸ்டைம் செயலி மூலமாகச் சந்திரநாத்தின் இருப்பிடத்தைக் கூலிப்படையினருக்குத் துல்லியமாகத் தெரிவித்து, கொல்கத்தாவின் மத்யம்கிராம் பகுதியில் அவரது காரை வழிமறித்து சரமாரியாகச் சுட்டுக் கொன்றுள்ளனர்.

எவ்வளவு நுட்பமாகத் திட்டமிட்டிருந்தாலும், நவீன டிஜிட்டல் தடயங்கள் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளன. சாகரின் ஐக்ளவுட் கணக்கில் பதிவான தகவல்கள், ஆதாரத்தை மறைக்க ஹூக்ளி ஆற்றில் செல்போனை வீசும் சிசிடிவி காட்சிகள், சுங்கச்சாவடிப் பதிவுகள் மற்றும் தடயவியல் அறிக்கைகள் ஆகியவற்றை ஒன்றிணைத்துச் சிபிஐ இந்த வழக்கை வெற்றிகரமாகத் தீர்த்துள்ளது. கூலிப்படையினருக்கு 30 லட்சம் ரூபாய் கைமாறியதையும் ஆதாரப்பூர்வமாகக் கண்டுபிடித்துள்ள அதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்பாக 11 பேரைக் கைது செய்து விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media